2025 மே 08, வியாழக்கிழமை

திருகோணமலை மாவட்ட செயலக புதிய கட்டட திறப்பு விழா 19இல்

Super User   / 2011 ஓகஸ்ட் 11 , மு.ப. 09:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்,  எஸ்.எஸ்.குமார்)

திருகோணமலை மாவட்ட செயலகத்தின் புதிய கட்டட திறப்பு விழா எதிர்வரும் 19ஆம் திகதி காலை 8.30 மணிக்கு திறந்துவைக்கப்படவுள்ளது.

திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் மேஜர் ஜெனரல் ரஞ்சித் சில்வா தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் டபிள்யூ.வீ.ஜே.செனவிரட்ன பிரதம அதிதியாக கலந்து கொண்டு இந்த கட்டிடத்தை திறந்துவைக்கவுள்ளார்.

இம்மாவட்ட செயலகத்தின் புதிய கட்டடம்  திருகோணமலை கொழும்பு பிரதான வீதியிலுள்ள 4ஆம் கட்டை சந்தியில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை மாவட்ட செயலகம் இதுவரை திருகோணமலை கோட்டைக்குள் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X