2025 மே 08, வியாழக்கிழமை

தொழுகையில் ஈடுபட்டவர்கள் மீது மர்ம மனிதர்கள் தாக்குதல்

Suganthini Ratnam   / 2011 ஓகஸ்ட் 15 , மு.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(பரீட்,எஸ்.எஸ்.குமார்)

கிண்ணியா மத்திய பள்ளிவாசலுக்குள் இன்று திங்கட்கிழமை அதிகாலை 3 மணியளவில் புகுந்த மர்ம மனிதர்கள் 10 பேர்,  தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது  தாக்குதல் நடத்தியதில் 5 பேர் அடிகாயங்களுக்குள்ளாகியுள்ளனர்.  

இதேவேளை, கிண்ணியாவில் மர்ம மனிதர்களின் நடமாட்டம் காரணமாக பொதுமக்களுக்கும் கடற்படையினருக்கும் இடையில்  நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட கைகலப்பில் ஐந்து பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், பொலிஸாரின் ஜீப் வண்டியொன்றும் நேற்றிரவு தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.

கிண்ணியாவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு மர்ம மனிதர்கள் பெண்களுடன் சேஷ்டையில் ஈடுபட முற்பட்ட வேளையில்  அவர்கள் கூச்சலிட்டதைத் தொடர்ந்து அங்கு ஒன்றுகூடிய பொதுமக்கள்; அம்மர்ம மனிதர்களை துரத்திச்சென்றபோது அம்மர்ம மனிதர்கள் கிண்ணியாவிலுள்ள கடற்படை முகாமுக்குள்  ஓடி ஒழிந்துகொண்டனர்.  

இந்த நிலையில், பொதுமக்கள் கடற்படை முகாம் மீது கற்களால் வீசி தாக்குதல் நடத்தியபோது கடற்படையினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர். இதன்போது இரு பொலிஸார் பொதுமக்களின் கல்வீச்சுக்கு இலக்காகி காயமடைந்துள்ள அதேவேளை, பொதுமக்கள் மூவர் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த இரு பொலிஸாரும் பொதுமக்கள் மூவரும் உடனடியாக  கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கிண்ணியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள இரு பொதுமக்களின் நிலைமை கவலைக்கிடமான நிலையில்  திருகோணமலை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவங்களையடுத்து, கிண்ணியாவில் பொலிஸாரினதும் இராணுவத்தினரதும் பாதுகாப்பு பலப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0

  • Abdul Salam Monday, 15 August 2011 04:55 PM

    ஆட்ட கடிச்சு மாட்ட கடிச்சு இப்ப பள்ளி வாசலுக்குள் போகும் அளவிற்கு வந்து விட்டாங்களா?

    Reply : 0       0

    deenmohamed Monday, 15 August 2011 05:16 PM

    யா அல்லாஹ் உன்னுடைய இல்லதிலுமா இவ்வாறு நடகின்றது! நீ தான் காவற்காரன் எங்களை காப்பாற்றுவாயாக!

    Reply : 0       0

    neethan Monday, 15 August 2011 05:22 PM

    பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ள நிலைமையில் பள்ளியில் வணக்கத்தில் ஈடுபடும்போது,தங்களில் சிலரை வணக்கச்தலத்தின் முன்றலில் விழிப்புடன் இருக்கவைத்திருக்கலாமே? அல்லது பொலிசாரின் பாதுகாப்பை கோரியிருக்கலாம்தானே? வேண்டாத பிரச்சினைகள் உருவாகிவிட்டதே?

    Reply : 0       0

    hari Monday, 15 August 2011 06:49 PM

    பள்ளிக்குள் புகுந்து தாக்கும் அளவுக்கு நிலைமை மாறிவிட்டதா?

    Reply : 0       0

    sahabdeen, Monday, 15 August 2011 09:08 PM

    மர்மங்கள்,மர்மமனிதன் வேடத்தில் மக்களை மடயர்கலாக்கிறது.மர்மங்களின் நிஜம்தான் புரியாத புதிராக இருக்கிறது.

    Reply : 0       0

    xlntgson Monday, 15 August 2011 09:25 PM

    வேலை இல்லாதவர்கள் அதிகரித்து விட்டார்கள் ஆனால் அவர்களுக்கு கையில் மடியில் குறையில்லை. தேவை- தற்காலிக சுகமும் ஆதிக்கமும், வெறி?

    Reply : 0       0

    சிறாஜ் Monday, 15 August 2011 10:51 PM

    மக்களை பீதியில் ஆழ்ழ்த்தும் இந்த நாசகார கும்பலை உடனே கைது செய்து தகுந்த தண்டனை வழங்கவேண்டும்.

    Reply : 0       0

    Aashif Ahamed Tuesday, 16 August 2011 02:51 AM

    யா அல்லாஹ் அநியாயக்காரர்களிடம் இருந்து எம்மை காத்தருள்வாயாக ஆமீன்.

    Reply : 0       0

    oor kuruvi Tuesday, 16 August 2011 03:01 AM

    என்ன மர்ம மனிதன் வந்தாலும் உண்மையான மர்ம மனிதன இதுவரை யாரும் பிடித்ததாக இல்லையே. சும்மா விடயம் விளங்காம கொஞ்சபேறு சண்டியன் ஆகிறாங்க. பாதுகாப்பு படைய தாக்குவது மகா பில. நாளக்கி அவங்கதான் எங்கள பாதுகாக்கணும். தேவயற்ற பிரச்சினையல உயிர் பலி மட்டும்தான் மிச்சம். பொது மக்கள் யோசித்து நடக்கவேண்டிய காலம். ஊர் இரண்டானால் ஆருக்கு சந்தோசம் தெர்யுமா வேல வெட்டி இல்லாம திரிகிறவனுக்குதான் வெட்கமா இரிக்கி .

    Reply : 0       0

    azeem Tuesday, 16 August 2011 02:51 PM

    நாட்டில் பயங்கரவாதத்தை முடிவுக்குகொண்டு வந்த ராணுவமும் உளவுத்துறையும் என்ன செய்கின்றன :sad:

    Reply : 0       0

    A.L.M.Rizlan Tuesday, 16 August 2011 04:54 PM

    unmaila grees bootham irukka? illaiya?

    ivarhalin thollai avvalavu anru sollave mudialappa.

    Reply : 0       0

    Rizadh Rock Tuesday, 16 August 2011 11:27 PM

    இந்த விடயம் தொடர்பாக என்ன சொல்றாங்க அரசுக்கு சார்பானவர்களும் படை தரப்பினரும்? இதும் வதந்தியா...?????

    Reply : 0       0

    amshaheed Wednesday, 17 August 2011 12:34 AM

    பாதிக்கப்பட்ட, பாதிக்கப்படாத அனைத்து மக்கள் சார்பிலும் பாதுகாவல் தேடி மக்கள் அனைவரும் அல்லாஹ்விடத்தில் துஆ பிரார்த்தனை செய்வதனால் இன்ஷா அல்லா நிச்சயம் நல்லபலன் கிடைக்கலாம்.விழிப்புடன் seyatpadunkal அல்லா போதுமானவன்.

    Reply : 0       0

    Hussain Wednesday, 17 August 2011 02:04 AM

    இன்னொரு யுத்தத்துக்கு வழி உருவாக்கிறார்கள்? யா அல்லாஹ் save us and ower brothers.

    Reply : 0       0

    r.k26 Friday, 19 August 2011 05:11 AM

    நாங்கள் அந்நியர்களின் உயிரை பாதுகாக்க எமது இரத்தங்களை தியாகம் செய்வது கட்டாயமா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X