Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Super User / 2011 ஓகஸ்ட் 15 , மு.ப. 08:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
(றிப்தி அலி, அமதோரு அமரஜீவ, எம்.பரீட்)
திருகோணமலை, கிண்ணியா பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை காலை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ள 24 பேரையும் விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் கிண்ணியாவிலிருந்து தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டுள்ளவர்கள் விடுதலை செய்யப்படும் பட்சத்தில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களினால் கிண்ணியா பிரதேச செயலகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள திருகோணமலை மாவட்ட செயலாளர் மேஜர் ஜெனரல் வீ.ஆர்.டி.சில்வா மற்றும் இராணுவத்தின் கிழக்கு மாகாண கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் பொனிபெஸ் பெரோ உள்ளிட்டேரை விடுதலை செய்ய முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.
கிண்ணியா பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், றிசாட் பதீயுதீன், ஏ.ஏச்.எம்.பௌசி உள்ளிட்ட விசேட தூதுக்குழுவொன்று விசேட ஹெலிக்கப்பட்டர் மூலம் இன்று காலை கிண்ணியா பிரதேசத்திற்கு விஜயம் செய்துள்ளனர்.
இதேவேளை, கிண்ணியா பிரதேசத்தில் மர்ம மனிதர்களின் நடமாட்டம் குறித்து பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை என திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் மேஜர் ஜெனரல் வீ.ஆர்.டி.சில்வா கிண்ணியா பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டுள்ள பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் மத்தியில் உரையாற்றும் போது தெரிவித்தார்.
கலவரங்கள் எவற்றிலும் ஈடுபடாது அமைதியாக வீடுகளில் இருக்குமாறும் பொதுமக்களுக்கான பாதுகாப்பை உடனடியாக வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
திருகோணமலை, கிண்ணியா பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வேளையிலும் இன்று திங்கட்கிழமை அதிகாலை வேளையிலும் மர்ம மனிதர்களின் நடமாட்டம் காரணமாக பொதுமக்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையில் குழப்ப நிலைமை ஏற்பட்டது.
இதனால், 24 பேர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டனர். இவர்களில் ஐந்து பேர் இன்றைய தினம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் க.பொ.த. உயர் தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களும் உள்ளடங்குகின்றனர்.
இதனைத் தொடர்ந்து அப்பிரதேசத்தில் நிலவிய பதற்ற நிலையை தணிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆராயும் கூட்டமொன்று கிண்ணியா பிரதேச செயலகத்தில் இன்று காலை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக், திருகோணமலை மாவட்ட செயலாளர் மேஜர் ஜெனரல் வீ.ஆர்.டி.சில்வா மற்றும் இராணுவத்தின் கிழக்கு மாகாண கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் பொனிபெஸ் பெரோ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது, கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி கிண்ணியா பிரதேச செயலகத்தை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முற்றுகையிட்டமை குறிப்பிடத்தக்கது.
Janan Monday, 15 August 2011 08:20 PM
முதலில் பொதுமக்களை மிரட்டும் படையினருக்கு என்ன எதிராக நடவடிக்கை எடுங்கள் ....
Reply : 0 0
Citizen Monday, 15 August 2011 10:39 PM
யாவும் நடத்தபின்புதான் நடவடிக்கை எடுப்பிர்களோ??
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
24 minute ago
2 hours ago