Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Menaka Mookandi / 2011 ஓகஸ்ட் 15 , பி.ப. 01:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
(இர்சாத் றஹ்மத்துல்லா)
கிண்ணியாவில் இடம்பெற்ற தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் கண்டிக்கப்பட வேண்டியவை என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும், கைத்தொழில் வணிகத்துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
கிண்ணியாவில் மத வழிபாட்டுத் தளங்கள் மற்றும் வைத்தியசாலைகளில் புகுந்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதானது, மிகவும் கவலைக்குரிய சம்பவமாகும். சட்டத்தையும், ஒழுங்கையும் நிலைநாட்டுவதில் பாதுகாப்பு தரப்பினரின் பங்கு மிகவும் முக்கியமானதாகும்.
பொதுமக்கள், பாதுகாப்பு தரப்பு மீது வைத்துள்ள நம்பிக்கையை இழக்கும் செயல்கள் இடம்பெற்றுள்ளமையானது வேதனை தரும் செயல் எனச் சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர், இந்த புனிதமிகு ரமழான் மாதத்தில் நாம் பொறுமைகாத்து இறைவனிடம் பிரார்த்தனைகளில் ஈடுபட வேண்டும் எனவும் அப்பிரதேச மக்களை கேட்டுள்ளார்.
அதேவேளை அமைச்சர் றிசாத் பதியுதீன் உள்ளிட்ட அமைச்சர்கள் குழுவினர் விசேட விமானம் மூலம் கிண்ணியா சென்று, எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆராய்ந்ததன் பின்னர் மாலை 4.35 மணியளவில் கொழும்பை வந்தடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. Pix By :- Abdul Fareed
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
20 minute ago
2 hours ago