2025 மே 08, வியாழக்கிழமை

ரிஸானாவை சவூதிக்கு அனுப்ப போலி ஆவணம் தயாரித்த உப முகவர் கைது

Menaka Mookandi   / 2011 ஓகஸ்ட் 16 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அமதோரு அமரஜீவ)

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை பணிப்பெண் ரிஸானா நபீக்கின் கடவுச் சீட்டில் வயது மாற்றப்பட்ட விவகாரத்துடன் தொடர்புடையதான உப முகவர் இன்று முற்பகல் கொழும்பில் வைத்து பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
ரிஸானாவின் வீட்டுக்கு அருகில் குடியிருக்கும் மேற்படி சந்தேக நபரே, ரிஸானாவின் வயதை மாற்றி போலி ஆவணங்களைத் தயாரிக்கக் காரணமாகியுள்ளார் எனவும் ரிஸானா சவூதிக்கு பணிப்பெண்ணாகச் செல்வதற்கு இவரே அனைத்து உதவிகளையும் செய்துள்ளார் எனவும் தெரியவருகிறது.

இந்நிலையில், மேற்படி சந்தேக நபரை பின்தொடர்ந்துள்ள பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர், அவரை கொழும்பில் வைத்து கைது செய்ததாக தெரிவித்தனர்.

ரிஸானாவின் கடவுச்சீட்டில் வயது மாற்றப்பட்டுள்ளமை தொடர்பில், அவரின் தாயாரான பரினாவினால் பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்தே மேற்படி சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0

  • meenavn Tuesday, 16 August 2011 08:39 PM

    வறுமை ரிசானாவை வாட்ட,உப முகவர் இதை சாதகமாக பயன்படுத்தி தனது பையினை நிறைத்துள்ளார்,அவர் மட்டுமல்ல முகவர் நிறுவனத்தின் ஒத்துழைப்பு இல்லாமல் காரியம் கைகூடாது. அவர்களையும் சட்டத்தின் முன் நிறுத்தவேண்டும்.

    Reply : 0       0

    aj Tuesday, 16 August 2011 08:57 PM

    கைது ஒரு முகவர்.
    ஆனால் பல முகவர்கள் சுதந்திரமாக திரிகிறார்கள்.
    இது போல பலர் உண்டு .

    Reply : 0       0

    bis Tuesday, 16 August 2011 10:47 PM

    'சப்'கள் இல்லை இல்லை சப்பிகள் இவர்கள்.

    Reply : 0       0

    oor kuruvi Wednesday, 17 August 2011 05:13 AM

    நம்மட நாட்டில எதுலதான் ஊழல் இல்ல. பாவம் தங்கை ரிசானாவை கூட விட்டு வைக்கல்ல.

    Reply : 0       0

    sakeena. Wednesday, 17 August 2011 06:41 AM

    முகவர்களைப்பிடித்து என்ன பயன்? அப்படியானால் ஒருவகையில் அரசாங்கமும் இதற்கு வகை சொல்ல வேண்டும்.

    Reply : 0       0

    hamza Wednesday, 17 August 2011 07:01 PM

    முகவர் வயது மாற்றிய விடயம் ரிசானாவிற்கு தெரியாதோ .......? தீர விசாரிக்காது நாம் குறைகூற முடியாது. தன் வயது மாற்றப்பட்டிருப்பது அவருக்கு தெரிந்த பிறகுதான் அவர் நாட்டைவிட்டு சென்றிருப்பார்?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X