Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Menaka Mookandi / 2011 ஓகஸ்ட் 16 , பி.ப. 03:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அமதோரு அமரஜீவ, எம்.பரீட்)
கிண்ணியா தள வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டு வந்த பணிபகிஷ்கரிப்பு இன்று மாலை 4 மணியுடன் கைவிடப்பட்டுள்ளதாக மாவட்ட வைத்திய அதிகாரி ஏ.எச்.எம்.சமீம் தெரிவித்தார். கிண்ணியா மாவட்ட வைத்தியசாலையில் இன்று மாலை முப்படை அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இப்பணிப் பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கிண்ணியா மாவட்ட வைத்திய அதிகாரி ஏ.எச்.எம்.சமீம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் வதுர ஜயசிங்க, கடற்படை லெப்டினன் காமாண்டர் தடங்கல் பொல, தரைப்படை 24ஆவதுவிஜயப்பாகு படைப்பிரிவு அதிகாரி மேஜர் கிச்சிலான், விமானப்படைப் பொறுப்பதிகாரி ஸ்கொலந்த பீரிஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இவ்வைபவத்தின் போது கருத்து தெரிவித்த உதவிப் பொலிஸ் அத்தியட்சகர், 'கிண்ணியா வைத்தியசாலையில் இவ்வாறானா சம்பவம் இடம்பெற்றதற்கு மன்னிப்பு கோருவதாகவும், வைத்தியசாலைக்குள் குண்டர்கள் நுழைந்ததனாலேயே துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றிருப்பதாகவும் தெரிவித்தார்.
அத்துடன் இனிவரும் நாட்களில் இவ்வாறான சந்தர்ப்பம் சம்பவங்கள் இடம்பெறாது என்பதற்கு தாம் உத்தரவாதாம் அளிப்பதாகவும் இவ்வைத்தியசாலைக்கு போதியளவு பொலிஸ் பாதுகாப்பு வழங்குவதாகவும் அவர் தெரிவித்தார். இவ்வைபவம் கிண்ணியா தள வைத்தியசாலை கேட்போர் மண்டத்தில் நடைபெற்றது.
இதில் வைத்தியர்கள், மருந்துவர்கள், தாதிமார்கள், ஊழியர்கள், சமாதானக் குழுத்தலைவர் எம்.எம்.ஏ.ஜவாத் உட்பட பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
27 minute ago
2 hours ago