Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Kogilavani / 2011 ஓகஸ்ட் 18 , பி.ப. 02:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சி.குருநாதன்)
புதிதாக நிர்மாணிக்கப்பட்ட திருகோணமலை மாவட்டச் செயலகத்தை உத்தியோகபூர்வமாக திறக்கும் நிகழ்வு கால வரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனை உத்தியோகப் பூர்வமாக திறந்துவைப்பதற்கான புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும் என்று திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சகல பிரதேச செயலாளர்களுக்கும் அறிவித்துள்ளார்.
இத்திறப்பு விழா நாளை வெள்ளிக்கிழமை நடைபெறும் என்றும் அதனை பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரத்தின திறந்து வைப்பார் என்றும் முன்னர் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டடிருந்தது.
திருகோணமலை-கண்டி வீதியில் திருகோணமலை நகரில் இருந்து நான்கு மைல் தொலைவில் புதிய மாவட்டச் செயலகம் திருகோணமலை மெட்றோ அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
தற்போது திருகோணமலை மாவட்டச் செயலகம் பிரட்ரிக் கோட்டைக்குள் உள்ள பழைய பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட கட்டிடங்களில் இயங்கி வருகின்றது.
பிரட்ரிக் கோட்டைக்குள்தான் திருக்கோணேஸ்வராலயமும் பாபநாச்சுனை தீர்த்தக் கிணறும் இலங்கை இராணுவத்தின் கஜபா படைப்பிரிவும் அமைந்துள்ளன.
மாவட்டச்செயலகம் புதிய கட்டிடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்ட பின்னர் மாவட்டச் செயலகமாகப் பாவிக்கப்பட்ட கட்டிடங்கள் புதைபொருளாராய்ச்சி திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
27 minute ago
2 hours ago