Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Super User / 2011 ஓகஸ்ட் 18 , பி.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.பாருக் தாஜுதீன்)
இலங்கைப் பணிப்பெண் ரிஸானா நபீக்கை சவூதி அரேபியாவுக்கு அனுப்பிய விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவரை ஆகஸ்ட் 30 ஆம் திகதி அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்துமாறு கொழும்பு பிரதம நீதவான் ரஷ்மி சிங்கப்புலி இன்று உத்தரவிட்டார்.
178, ஷாபீ நகர், மூதூரைச் சேர்ந்த சாஹுல் ஹமீட் அப்துல் லத்தீவ் மற்றும் 3, பள்ளிவாசல் வீதி, கொள்ளுபிட்டி எனும் முகவரியைச் சேர்ந்த பாகீர் மொஹமட் வஜுர்தீன் ஆகிய இரு சந்தேக நபர்களை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று ஆஜர்படுத்தினர்.
ரிஸானா நபீக் வெளிநாடு செல்வதற்காக போலி ஆவணங்களை பெறுவதற்கு இச்சந்தேக நபர்கள் உதவியதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர்.
ரிஸானாவை சவூதி அரேபியாவுக்கு அனுப்பிய முகவரான, கொழும்பு, முதலாவது மாளிகாகந்த ஒழுங்கையிலுள்ள ஒமார் ட்ரவல்ஸின் உரிமையாளரின் வாக்குமூலத்தின்படி, வஜுர்தீன் மற்றும் சலாம் என்பவரால் ரிஸானா தமக்கு அறிமுகப்படுத்தப்பட்டதாக அம்முகவர் தெரிவித்துள்ளதாகவும் தம்மை உப முகவர்களாக அறிமுகப்படுத்திக்கொண்ட அந்நபர்கள் தமக்குரிய கமிஷன் தொகையாக 12,000 ரூபாவை பெற்றதாகவும் குற்றப் புலனாய்வுப்பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்தனர்.
அதேவேளை சாஹூல் ஹமீத் அப்துல் லத்தீவ் என்பவர் ரிஸானாவின் தந்தையாக தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டதாகவும் மேற்படி முகவர் தெரிவித்துள்ளார்.
குற்றப்புலனாய்வுப் பிரிவின் கோரிக்கையின்பேரில் சந்தேக நபர்களை ஆகஸ்ட் 30 ஆம் திகதிவரை விளக்கமறியிலில் வைக்குமாறும் முதலாவது சந்தேக நபரான அப்துல் லத்தீவ்வை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டார்.
meenavan Friday, 19 August 2011 02:23 PM
முகவர், உப முகவர் என்று நிலைமையை சிக்கலாக்காமல், அபலை ரிசானாவின் விடுதலையை துரிதப்படுத்தவும்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
30 minute ago
31 minute ago