2025 மே 08, வியாழக்கிழமை

மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம்

Kogilavani   / 2011 ஓகஸ்ட் 26 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கியாஸ் ஷாபி)
திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் எதிர்வரும் 29 ஆம் திகதி திங்கட்கிழமை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

மீன்பிடி நீரியல் வளத்துறை பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே, கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுறை சந்திரக்காந்தன் ஆகியோரது இணைத் தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ கலந்து கொள்ளவுள்ளார்.

இக்கூட்டத்திற்கு திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச செயலாளர்கள், உள்ளுராட்சித் தலைவர்கள், அரச மற்றும் தனியார் திணைக்கள தலைவர்கள் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X