Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Menaka Mookandi / 2011 செப்டெம்பர் 02 , மு.ப. 11:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
'கிறீஸ் பூதம் இன்று வருகிறது' என கையடக்கத் தொலைபேசிகளுக்கு எஸ்.எம்.எஸ். (குறுஞ்செய்தி) அனுப்பியதான சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நபர் ஒருவரை எதிர்வரும் 12ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க திருகோணமலை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேற்படி சந்தேக நபரால் அனுப்பப்பட்ட குறுஞ்செய்தியினைப் பெற்றுக்கொண்ட நபரொருவரால் பொலிஸ் அவசர அழைப்பான 119க்கு விடுக்கப்பட்ட தகவலை அடுத்து மேற்படி நபர் நேற்று வியாழக்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
திருகோணமலை, பாலையூற்றுப் பிரதேசத்தைச் சேர்ந்த ஜீவரத்னம் ஜீவகாந்தன் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார். இன்றைய தினம் மேற்படி நபர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டதை அடுத்து, அவரை எதிர்வரும் 12ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை மாவட்ட மேலதிக நீதவான் ரொஹான் ஜயவர்தன உத்தரவிட்டுள்ளார். (Amadoru Amarajeewa)
siraj Saturday, 03 September 2011 06:31 AM
அடக் கடவுளே. வேண்டாம் ஐயா பகடி..........
Reply : 0 0
xlntgson Sunday, 04 September 2011 09:19 PM
நியாயமான குறுஞ்செய்தி அனுப்புபவர்களைக்கூட சந்தேகமாக நினைப்பார்கள் இனி!
குரல் அழைப்போ தெளிவில்லை! ஏகப்பட்ட பிரச்சினை volume ஒலி தெளிவில்லை coverage பரவல் இல்லை charge சக்தி இல்லை என்று சமயத்தில் ஏனென்று தெரியாமலே துண்டிப்பாகி விடும்!
வேண்டுமென்றே வைத்தது போல், காசுப்பிரச்சினையும் கூட!
அவசரம் அவசரமாக பேச வேண்டியதும் இல்லை. குறுஞ்செய்தியை துஷ்பிரயோகம் செய்யாதீர்!
துஷ்பிரயோகம் செய்பவர்களை நிராகரியுங்கள் புகார் செய்வதன் மூலம் அவர்கள் பிரபலம் அடைகின்றனர்!
குறும்பு என்று எண்ணிக்கொண்டு செய்வதை என் செய்ய?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
25 minute ago
2 hours ago