2025 மே 07, புதன்கிழமை

உழைப்பிற்கேற்ற ஊதியத்தை பெறமுடியவில்லையென உப்பு உற்பத்தியாளர்கள் விசனம்

Kogilavani   / 2011 செப்டெம்பர் 04 , மு.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கியாஸ் ஷாபி)
கிண்ணியா பிரதேசத்தில் இம்முறை உப்பு விளைச்சல் அதிகரித்திருக்கும்போதிலும் இவற்றைச் சந்தைப் படுத்துவதில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதால் உழைப்புக்கேற்ற இலாபம் பெறமுடியவில்லையென உற்பத்தியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கச்சக்கொடித்தீவு, முனைச்சேனை ஆகிய பகுதிகளில் 250 ஏக்கர் பரப்பில் உப்பு உற்பத்தி செய்யப்படுகின்றது. தற்பொழுது நிலவும் கடும் வரட்சி காரணமாக இதன் உற்பத்தி அதிகரித்திருக்கின்றது.

ஆனபோதிலும், அயடின் கலப்பதற்கு இன்னும் இவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லையென்பதால்  தென் பகுதிகளில் இருந்து வரும் வியாபாரிகளுக்கு 50 கிலோ கிராம் எடையுடைய உப்பு மூடை ஒன்றை 300 ரூபாவுக்கே விற்பனை செய்து வருகின்றனர். இதன்காரணமாக அதிகளவு இலாபத்தை அயடீன் கலந்து விற்கும் இந்த வியாபாரிகளே பெறுகின்றனர்.

அத்தோடு அறுவடை செய்யப்பட்ட உப்பினை பருவ கால மழைக்கு முன்னர் திடீரென இடை இடையே பெய்யும் மழையில் இருந்தும் பாதுகாப்பதற்குத் தேவையான களஞ்சிய வசதிகள் எதுவும் இன்றி இருப்பதாகவும் உற்பத்தியாளர்கள் கவலை தெரிவிப்பதோடு இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X