Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Menaka Mookandi / 2011 செப்டெம்பர் 07 , மு.ப. 07:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அமதொரு அமரஜீவ)
யுத்தம் காரணமாக சம்பூரிலிருந்து இடம்பெயர்ந்து மூதூர் தற்காலிக முகாம்களில் இன்னமும் தங்கியுள்ள 900 குடும்பங்களைச் சேர்ந்த மக்களை, கிழக்கு மாகாண புதிய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் லால் பெரேரா, சந்தித்து அவர்களின் நலன் விசாரித்துள்ளார்.
சும்பூர் பிரதேசம் முன்னர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்த அதேவேளை, தற்போது பொருளாதார வலயமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே மேற்படி மக்கள் இன்னமும் மீள்குடியேற்றப்படாத நிலையில் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இம்மக்களை சந்தித்த மேஜர் ஜெனரல் லால் பெரேரா, அரசாங்கத்தால் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள மாற்றுக் காணிகளில் குடியேறுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். அத்துடன் அம்மக்களுக்குத் தேவையான உலர் உணவுப் பொருட்கள் சிலவற்றையும் இதன்போது அவர் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago