Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Menaka Mookandi / 2011 செப்டெம்பர் 08 , பி.ப. 02:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கியாஸ் ஷாபி)
கிண்ணியா வலயக்கல்வி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட சுங்கான்குழி கலைமகள் வித்தியாலயம் மூடப்படும் அபாயத்தில் உள்ளதாகத் தெரியவருகிறது. அப்பகுதியில் குடியிருந்த மக்கள் இதுவரை முழுமையாக மீளக்குடியேறாததினால் இப்பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளமையே இதற்கு காரணமாகும்.
கடந்த கால யுத்த சூழ்நிலை காரணமாக இப்பகுதி மக்களும் இடம்பெயர்ந்தனர். எனினும் அவர்கள் குறிப்பிட்ட காலத்தில் மீளக்குடியேறினர். இதனால் அப்பாடசாலை ஆசிரியர் தட்டுப்பாட்டை நிவர்த்திக்கும் பொருட்டு அங்கு தொண்டர் ஆசிரியராகக் கடமையாற்றிய மூவருக்கு நிரந்தர ஆசிரியர் நியமனமங்களும் வழங்கப்பட்டன.
அதேபோல மீளக்குடியேறிய அனைவருக்கும் வடக்கு கிழக்கு வீட்டு மீள் நிர்மாணத்திட்டத்தின் கீழ் வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்பட்டன. எனினும் வீடு பெற்ற பலர் தமது நிரந்தர இருப்பிடத்தை ஆலங்கேணி, ஈச்சந்தீவு போன்ற கிராமங்களுக்கு மாற்றிவிட்டனர். இதனால் தற்போது இவ்வீடுகளுள் பெரும்பாலானவை ஆடு, மாடுகள் உறங்கும் இடங்களாக மாறியுள்ளன.
பாடசாலையில் மாணவர் எண்ணிக்கை குறைந்ததையடுத்து அங்கு கற்பித்த ஆசிரியர்களுக்கும் இடமாற்றம் வழங்கப்பட்டுவிட்டது.
தற்தோது நாடு முழுவதும் சுமூகநிலை நிலவுவதால் உயர் அதிகாரிகள் இப்பாடசாலையைப் பார்வையிட வரக்கூடும்.
இவ்வாறான சூழ்நிலையில் மாணவர் எண்ணிக்கையைக் கவனத்தில் கொண்டு பாடசாலையை மூடிவிடும் முடிவுக்கு வரக்கூடிய சாத்தியங்கள் இருப்பதால் அப்பகுதி மக்கள் உடன் மீள குடியிருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
4 hours ago