2025 மே 07, புதன்கிழமை

சம்பூர் மக்கள் மீள்குடியேற்றத்துக்கு இணங்காவிடின் அகதி அந்தஸ்து பறிக்கப்படும்: கிழக்கு மாகாண ஆளுநர்

Menaka Mookandi   / 2011 செப்டெம்பர் 09 , பி.ப. 06:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

(அமதோரு அமரஜீவ)

திருகோணமலை, சம்பூர் பிரதேசத்திலிருந்து யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து மூதூர் நலன்புரி முகாம்களில் தங்கியுள்ள மக்கள் C ரீதியில் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அகதி அந்தஸ்து பறிக்கப்படும் என கிழக்கு மாகாண ஆளுநர் மொகான் விஜேவிக்கிரம எச்சரிக்கை விடுத்துள்ளார். 

மேற்படி மக்கள் மீள்குடியேறுவதற்கான அனைத்து வசதி வாய்ப்புக்களும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையிலும் அவர்கள் மீள்குடியேற்றத்துக்கு இணங்கவில்லையாயின் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

யுத்தம் காரணமாக சம்பூரிலிருந்து இடம்பெயர்ந்த சுமார் 900 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் மூதூரில் அமைக்கப்பட்டுள்ள 3 தற்காலிக நலன்புரி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

சம்பூர் பிரதேசம் ஆரம்பத்தில் பாதுகாப்பு வலயமாகக் காணப்பட்ட நிலையில் தற்போது அது பொருளாதார மத்திய நிலையமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அங்கிருந்து இடம்பெயர்ந்த மக்களை அப்பிரதேசத்திலேயே மீள்குடியேற்றம் செய்யாது வேறு பிரதேசமொன்றில் மீள்குடியேற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்நிலையில், இம்மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் ஆராயும் கூட்டமொன்று நேற்று வெள்ளிக்கிழமை கிழக்கு மாகாண ஆளுநர் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0

  • hari Saturday, 10 September 2011 11:42 PM

    ஒரு சமூகத்தின் பூர்வீர்க இடத்தை பொருளாதார மத்திய நிலையமாக மாற்ற வேண்டிய இருந்த அத்துணை தேவை என்ன என்பதுதான் யாருக்கும் விளங்கவில்லை. இவ்வாறான ஒரு இந்நாட்டின் பெரும்பான்மை சமூகத்தினருக்கு நடந்தால் இந்நேரம் என்ன நடக்கும்? ஆட்சியாளர்கள் என் மக்களுக்கான ஆட்சியை செய்யாது அவர்களின் தேவைக்கு முடிவுகளை எடுக்கிறார்கள்?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X