Suganthini Ratnam / 2011 டிசெம்பர் 02 , மு.ப. 06:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கஜன்)
திருகோணமலை மாவட்டத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளில் இந்த மாவட்டத்தின் கட்டட ஒப்பந்தக்காரர்கள் திட்டமிட்ட முறையில் புறக்கணிக்கப்படுவதாக திருகோணமலை மாவட்ட கட்டட ஒப்பந்தக்காரர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
திருகோணமலை ஊடக இல்லத்தில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியாலளர்களுடனான சந்திப்பிலேயே அவர்கள் இவ்வாறு கூறியுள்ளனர்.
திருகோணமலை மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதனை நாங்கள் பாராட்டுகின்றோம். ஆனால் நாம் இதில் ஈடுபடமுடியாதவாறு ஒப்பந்தங்கள் கோரப்படுகின்றன. இதனால் இத்தொழிலை நம்பியுள்ள 157 ஒப்பந்தக்காரர்கள் பாதிக்கப்படுகின்றனரென அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கிழக்கு மாகாணசபை அதிகாரிகளுக்கும் திருகோணமலை மாவட்ட செயலாளருக்கும் பல தடவை இது தொடர்பில் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் அவர்கள் இது தொடர்பில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதனையும் மேற்கொள்ளவில்லையெனவும் திருகோணமலை மாவட்ட கட்டட ஒப்பந்தக்காரர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
46 minute ago
50 minute ago
3 hours ago
3 hours ago
vallal Monday, 05 December 2011 06:35 AM
நீங்கள் கட்டிய கட்டிடம் எப்படி என்று trinco மக்களுக்கு நன்றாக தெரியும்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
50 minute ago
3 hours ago
3 hours ago