Kogilavani / 2011 டிசெம்பர் 03 , மு.ப. 07:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(சி.குருநாதன்)
போர், அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட வறிய குடும்பங்களைச் சேர்ந்த தொழில் வாய்ப்பற்ற பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் திருகோணமலை கஞ்சிமடம் எனும் இடத்தில் பத்திக் கவுன்களை விற்பனை செய்யும் நிலையமொன்று நேற்று வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.
'சுயதொழில் உதவிக் குழுக்கள்' திட்டத்தின் கீழ் இலங்கை ஒபர்(ழுகநநச) நிறுவனம் திருகோணமலையில் இந்நிலையத்தை திறந்து வைத்தது.
இதன்மூலம், பெண்கள் தமது வீடுகளில் உற்பத்தி செய்யும் ஆடைகள், பொருட்களை கொண்டு வந்து இந்நிலையத்தில் விற்பனை செய்து தமது ஜீவனோபாயத்தை பெற்றுக்கொள்ள முடியும்.
இந்நிலையத்தின் திறப்பு விழா நிகழ்வில், திருகோணமலை பட்டனமும் சூழலும் பிரதேச செயலாளர் திருமதி சசிதேவி ஜலதீபன், திருகோணமலை நகர சபையின் தலைவர் க.செல்வராசா, திருகோணமலை பட்டனமும் சூழலும் பிரதேச சபையின் தலைவர் ஆர்.விஜேந்திரன், ஒபர் திருகோணமலை அலுவலக உத்தியோகத்தர் த.பாலகெங்காதரன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
.jpg)
42 minute ago
46 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
46 minute ago
3 hours ago
3 hours ago