2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

மூதூர் புனித அந்தோனியார் மகா வித்தியாலயத்தில் அறிவியல் கண்காட்சி

Kogilavani   / 2012 பெப்ரவரி 29 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(முறாசில்)

மூதூர் புனித அந்தோனியார் மகா வித்தியாலயமும் மூதூர் 'தடயம்' நூதனசாலையும்; இணைந்து ஏற்பாடு செய்த அறிவியல் கண்காட்சி இன்று புதன்கிழமை ஆரம்பிக்கப்பட்டது.

புனித அந்தோனியார் மகா வித்தியாலய வளாகத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட இக்கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில் மூதூர் வலயக் கல்விப் பணிமனையின் பிரதிக்கல்விப் பணிப்பாளர் என்.விஜேந்திரன்(நிருவாகம்), பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எம்.ஜவாத் (கல்வி அபிவிருத்தி மற்றும் திட்டமிடல்) பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.லோகராஜா (முகாமைத்துவம்) உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இக்கண்காட்சியில் 1658ஆம் ஆண்டு 'ஆன்' என்னும் பாய்மரக் கப்பல் மூலம் கடல் பயணத்தை மேற்கொண்ட  பிருத்தானியாவைச் சேர்ந்த ரொபட் நொக்ஸ் என்பவர் சடுதியாக மூதூரை வந்தடைந்ததை நினைவு கூரும் வகையில் அமைக்கப்பட்டிருந்த பாய்மரக்கப்பலையும் அதனுள் எழுதப்பட்டிருந்த வரலாற்றையும் பார்ப்பதற்கு அதிகமானோர் ஆர்வம் காட்டினர். 


  Comments - 0

  • jawab Saturday, 03 March 2012 11:33 PM

    நன்றாஹா இருக்குது ஆனால் எந்த அரசியல்வாதியும் இல்லை உங்கள் நிகழ்ச்சிக்கு?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .