2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

கட்டாரிலிருந்து நாடு திரும்பிய பெண்ணை காணவில்லையென முறைப்பாடு

Suganthini Ratnam   / 2012 மார்ச் 08 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

கடந்த 3 வருடங்கள் கட்டாரில் பணிப்பெண்ணாக கடமையாற்றி  நாடு திரும்பிய கிண்ணியா குறிஞ்சாக்கேணியைச் சேர்ந்த பெண்ணொருவர்  இதுவரையில்  வீடு வந்து சேரவில்லையென அவரது கணவர் கிண்ணியா பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

கிண்ணியா குறிஞ்சாக்கேணி 2ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த ஆலிபு –நஸீமா (வயது 32 ) என்பவரே இவ்வாறு காணாமல் போனவராவர்.
இவர் கட்டாரில் 03 வருடங்கள் பணியாற்றியதுடன், கடந்த பெப்ரவரி மாதம் 12ஆம் திகதி நாடு திரும்பியுள்ளார். ஆனால் இவர் வீடு வந்து சேரவில்லை.

கட்டாரிலுள்ள  எஜமானின் தொலைபேசித் தகவல் கட்டுநாயக்க விமான நிலையத்தின் தகவல் என்பன இவர் இலங்கை வந்துள்ளமையை உறுதிப்படுத்துகின்றன. இவரைப்பற்றி தகவல் தெரிந்தவர்கள் 0773916392 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்புகொண்டு தகவல் வழங்குமாறு  உறவினர்கள் கேட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .