2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

சுவாமி கிருஷ்ணானந்தாவின் அருளுரைகள் வழங்கும் நிகழ்வு

Kogilavani   / 2012 மார்ச் 12 , மு.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(சி.குருநாதன்)

இலங்கை சின்மயா மிஷனின் திருகோணமலைக் கிளையின் ஏற்பாட்டில் இந்தியாவைச் சேர்ந்த சின்மயா மிஷன் சுவாமி கிருஷ்ணானந்தாவின் அருளுரைகள் வழங்கும் நிகழ்வு கடந்த வியாழன் முதல் சனிக்கிழமை வரை திருகோணமலையில் இடம்பெற்றது.

இதன்போது, திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் 'நம்மால் முடியுமா?' என்ற தலைப்பில் சுவாமி கிருஷ்ணானந்தா உரையாற்றினார். இதேவேளை, திருகோணமலை மாவட்டத்தில் அறநெறி பாடசாலைகளில் கற்பித்தலில் ஈடுபடும் அறநெறி ஆசிரியர்களுக்கு இந்துக்கலாசார திணைக்களத்தின் அனுசரணையுடன் நடத்தப்பட்ட செயலமர்விலும் சுவாமி உரையாற்றினார்.

விவேகானந்தா கல்லூரியில் இந்து சமயத்தை கற்பிக்கும் ஆசிரியர்களுக்காக நடத்தப்பட்ட செயலமர்விலும்  சுவாமி உரை நிகழ்த்தினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .