Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2012 மார்ச் 14 , மு.ப. 03:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரமன்)
திருகோணமலை பொதுவைத்தியசாலையின் துணை மருத்துவ உத்தியோகத்தர்கள் இன்று புதன்கிழமை இரண்டாவது நாளாகவும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்போராட்டம் காரணமாக வைத்தியசாலையின் மருத்துவ செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை வைத்தியசாலையின் மருத்துவ அத்தியட்சகர் வைத்தியர் ஈ.ஜி.ஞானகுணாளன் தெரிவித்தார்.
இப்போராட்டம் காரணமாக நேற்று செவ்வாய்க்கிழமை வைத்தியசாலைக்கு வந்த பெருந்தொகையான நோயாளர்கள் வழங்கப்பட்ட மருந்துகளை பெறமுடியாது ஏமாற்றத்துடன் வீடு திரும்ப வேண்டிய நிலையேற்பட்டது.
துணை மருத்துவ உத்தியோகத்தர்களான மருந்தாளர்கள், எக்ஸ்கதிர் தொழில் நுட்பவியலாளர்கள், இயன் மருத்துவர், மருத்துவ ஆய்வுகூட நுட்பவியலாளர்கள் ஆகியோரே வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
சம்பள உயர்வு பிரச்சினை, சம்பள நிலுவைத்தொகை உரிய காலத்தில் வழங்கப்படாமலுள்ளமை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து துணை மருத்துவ உத்தியோகத்தர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இன்று முதல் தமது கோரிக்கைகள் நிறைவேறும் வரை காலவரையறையற்ற இப்போராட்டம் தொடருமென துணை மருத்துவ உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
4 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago
8 hours ago