2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

சேவை நலன் பாராட்டு

Suganthini Ratnam   / 2012 மார்ச் 18 , மு.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரமன்)

திருகோணமலையின் மூத்த கல்வியாளரும் அதிபருமான நாகராஜா இராஜநாதன் தனது 38 வருட கல்விச்சேவையிலிருந்து ஓய்வுபெற்றதை முன்னிட்டு அவருக்கு நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை  சேவை நலன் பாராட்டு விழா நடைபெற்றது.

இவருக்கான சேவைநலன் பாராட்டை திருகோணமலை பெருந்தெரு விக்னேஸ்வரா மகாவித்தியால கல்விச் சமூகம் வித்தியாலய மண்டபத்தில் நடத்தியது.

1973ஆம் ஆண்டு ஆசிரியராக திருகோணமலை திரியாய் மகாவித்தியாலயத்தில் தமது கல்விச்சேவையை ஆரம்பித்த நா.இராஜாநாதன் ஓய்வு பெறும்பொழுது பெருந்தெரு விக்னேஸ்வரா மகாவித்தியலய அதிபராக 14 வருடங்கள் சேவை புரிந்து ஒய்வு பெற்றுள்ளார்.

இவர் ஆசிரிய பணியுடன் நின்றுவிடாது ஆசிரிய தொழிற் சங்க பணியிலும் ஈடுபட்டு இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத்தின் தேசிய தலைவராக பணியாற்றி ஆசிரியர்களின் தொழில்சார் உரிமைகளுக்கு குரல் கொடுத்து செயற்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .