2025 மே 03, சனிக்கிழமை

புதிய அங்கத்தவர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கிவைப்பு

Suganthini Ratnam   / 2012 மார்ச் 18 , மு.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரமன்)

திருகோணமலை பொதுவைத்தியசாலையின் 2012ஆம் ஆண்டிற்கான புதிய வைத்தியசாலைக் குழுவிற்கு புதிய தலைவர் மற்றும் நிர்வாகிகள் உட்பட 28 அங்கத்தவர்களுக்கான நியமனக்கடிதங்கள் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை வழங்கிவைக்கப்பட்டன. கிழக்கு மாகாண சுகாதாரத்துறை அமைச்சின் உதவிச் செயலாளர் ஏ.எல்.எம்.உசைன் டீனால் நியமனக் கடிதங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

பொதுவைத்தியசாலைக் குழுவின் புதிய அங்கத்தவர்கள், கிழக்கு மாகாண சுகாதாரத்துறை அமைச்சர் எம்.எஸ்.சுபைரினால் நியமனம் செய்யப்பட்டிருந்தனர்.

2012ஆம் ஆண்டின் திருகோணமலை பொது வைத்தியசாலைக்குழுவின் புதிய தலைவராக திருகோணமலை மாவட்ட வர்த்தக சம்மேளன உயரதிகாரியும் பட்டயக் கணக்காளருமான பா.உதயசங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.  இணைச் செயலாளர்களாக எஸ்.கீதபொன்கலன், எம்.என்.நிகார் பொருளாளராக வைத்தியர் வை.சச்சிதானந்தம், உபதலைவர்களாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் நிமால் காமினி, அல்ஹாஜ் ஏ.எஸ்.ஜவாகிர் தெரிவு செய்யப்பட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X