Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2012 மார்ச் 20 , மு.ப. 03:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கஜன்)
கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் புறநெகும திட்டத்தினை மேற்பார்வை செய்வதற்கும் ஆலோசனை வழங்குவதற்கும் உலக வங்கியின் நிபுணர்கள் குழுவொன்று திருகோணமலைக்கு நேற்று திங்கட்கிழமை வருகைதந்தது.
உலக வங்கியின் தெற்காசிய பிராந்தியத்திற்கு பொறுப்பான கொள்முதல் நிபுணர் ஹைதர் இர்சா (பாகிஸ்தான்), சிரேஷ்ட நிதி மேலாண்மை நிபுணர் பி.விக்கிரமசிங்க, ஆலோசகர் விக்கிரமரெட்ன ஆகியோரடங்கிய இக்குழுவினர் கிழக்கு மாகாண புறநெகும திட்டப் பணிப்பாளர் ஏ.உதயகுமார், உதவிப்பணிப்பாளர் ந.தமிழ்ச்செல்வன், தகவல் கல்வித் தொடர்பாடல் நிபுணர் ஏ.எஸ்.கௌரிபாலன் ஆகியோரை வரோதய நகரிலுள்ள திட்ட அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
இந்நிபுணர் குழு எதிர்வரும் தினங்களில் திருகோணமலையின் கிண்ணியா, மூதூர் உள்ளூராட்சி சபைகளுக்கும் 21ஆம் திகதி மட்டக்களப்பு உள்ளூராட்சி சபைகளுக்கும் 22ஆம் திகதி அம்பாறை மாவட்டத்திற்கும் விஜயம் மேற்கொள்ளவுள்ளனர்.
2 hours ago
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
7 hours ago