2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

நாடு, நகர திட்டமிடல் சட்டமூலம் கிழக்கு மாகாண சபையில் நிராகரிப்பு

Super User   / 2012 மார்ச் 20 , பி.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(றிப்தி அலி, ரி.லோஹித்)

நாடு மற்றும் நகர திட்டமிடல் திருத்த சட்டமூலம் கிழக்கு மாகாண சபையினால் இன்று செவ்வாய்க்கிழமை ஏகமனாதாக நிராகரிக்கப்பட்டுள்ளது என மாகாண சபையின் தவிசாளர் எச்.எம்.எம்.பாயிஸ் தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

ஆனால் இச்சட்டமூலத்தில் மேற்கொள்ளப்பட்ட வேண்டிய சில திருத்தங்கள் கிழக்கு மாகாணத்தினால் மத்திய அரசுக்கு முன்மொழியப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

மார்ச் மாத்திற்கான கிழக்கு மாகாண சபையின் அமர்வு இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற போதே குறித்த சட்டமூலம் ஏகமனதாக நிராகரிக்கப்பட்டள்ளது. அத்துடன் இச்சட்டமூலம் தொடர்பிலான பரிந்துரைகளை மத்திய அரசுக்கு அனுப்பிவைப்பது எனவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

கிழக்கு மாகாகாண சபையில் கடந்த பெப்ரவரி 13ஆம் திகதி இடம்பெற்ற விசேட அமர்வின் போது  நாடு மற்றும் நகர திட்டமிடல் திருத்த சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டது.  ஆனால், எதிர்க்கட்சி உறுப்பினர்களின் குழப்ப நிலையையடுத்து கிழக்கு மாகாண சபையின் குறித்த அமர்வு பெப்ரவரி 28ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் கிழக்கு மாகாண சபையின் அமர்வு மீண்டும் இன்று செவ்வாய்க்கிழமையே கூடியது. இதன்போதே, நாடு மற்றும் நகர திட்டமிடல் திருத்த சட்டமூலம் ஏகமனதாக நிராகரிக்கப்பட்டது.


  Comments - 0

  • Hari Tuesday, 20 March 2012 11:59 PM

    நல்ல முடிவு. புதிய உரிமைகளை பெற்றுக்கொள்ள துடிக்கும் இவ்வேளையில் இருக்கும் உரிமையை விட்டுக்கொடுப்பதா? கருத்து சுதந்திரம் எங்கும் இருக்க வேண்டும். உருப்படியான ஒருவேலையே மாகாண சபை செய்துள்ளது. நன்றி.

    Reply : 0       0

    அன்பாளன் Wednesday, 21 March 2012 01:07 AM

    வரலாற்று உண்மைகளை மறைத்து தாங்களே இலங்கையின் மூத்த குடிகள் என்று ஏமாற்றுகின்றவர்கள் எப்படி உடன்படுவர்?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .