2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

மூதூரில் இடம்பெறும் அபிவிருத்தி பணிகளை ஆராய்வதற்கு உலக வங்கியின் திட்ட குழுவினர் விஜயம்

Kogilavani   / 2012 மார்ச் 21 , பி.ப. 01:02 - 0     - {{hitsCtrl.values.hits}}



(முறாசில்)


மூதூர் பிரதேச சபையினால்  நெல்ஸிப் - புறநெகும திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுவரும்  கடை தொகுதிகள், உள்ளூர் வீதிகள் முதலான அபிவிருத்திப் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆராய்வதற்கென உலக வங்கியின் திட்டக் குழுவினர் நேற்று செவ்வாய்கிழமை மூதூருக்குச் சென்றிருந்தனர்.

உலக வங்கியின் தெற்காசியப் பிராந்தியத்திற்கான சிரேஷ;ட கொள்வனவு நிபுணர் நைதர் ரஷh தலைமையிலான இக்குழுவில் சிரேஷ்ட நிதி முகாமை நிபுணர் ஜிவன்கா பி.விக்கிரம சிங்க, நெல்ஸிப் திட்டத்திற்கான உலக வங்கி ஆலோசகர் சரத் விக்ரம ரத்ன உள்ளிட்ட பலர் இடம்பெற்றிருந்தனர்.

மூதூர் பிரதேச சபையினால் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்திப் பணிகள் தொடர்பாக தவிசாளர் ஏ.எம்.ஹரீஸிடம் திருப்தி தெரிவித்த இக்குழுவினர் பணிகளை விரைவாக மேற்கொள்வது குறித்தும் ஆலோசனை வழங்கினர்.




  Comments - 0

  • mohamed Thursday, 22 March 2012 05:14 PM

    develope pane irukum mutura meendum develope panama develope panatha division a develope pana parunga.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .