2025 மே 03, சனிக்கிழமை

கோணேஸ்வராலயத்தின் வரலாற்று நூல் வெளியீடு

Super User   / 2012 ஏப்ரல் 01 , பி.ப. 01:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சி.குருநாதன்)

திருகோணமலை கோணேஸ்வாரலயத்தின் வரலாற்று தொகுப்பு நூலை வெளியிடும் பணியில் பரிபாலன சபை ஈடுபட்டுள்ளதாக அதன் செயலாளர் க.அருள்சுப்பிரமணியம் தெரிவித்தார்.

கோணேஸ்வாரலய பரிபாலன சபையின் வருடாந்த பொதுக்கூட்டம் இன்று ஞாயிறுக்கிழமை ஆலய கல்யாண மண்டபத்தில் பரிபாலன தலைவர் ப.பரமேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கோணேஸ்வராலயத்தின் வரலாறு, கீர்த்தி மற்றும் பெருமை ஆகியன பற்றிய பல நூல்கள் வெளிவந்துள்ளன. எனினும் ஆலயங்களின் இருப்பினை கேள்விக்குறியாக்கும் வராலற்றுத்திரிபுகள் இடம்பெறும் இக்காலகட்டத்தில் ஆலயத்தின் நீண்ட கால வரலாறு வெளிவர வேண்டும் என அவர் தெரிவித்தார்.

"இதற்காக கல்வெட்டுக்கள், பதிகங்கள், திருப்பணிகள், கட்டுரைகள் மற்றும் கிடைத்ததற்கரிய படங்கள் ஆகியன அனைத்தையும் முறையாக தொகுத்து ஒரே புத்தகமாக வெளியிடும் பணி முக்கியமானது.

அதனை கருத்திற்கொண்டு ஆலய வரலாற்று நூலை வெளியிடும் பணி மேற்கொள்ளப்பட்டிருப்பதாக" செயலாளர் அருள்சுப்பிரமணியம் தனது ஆண்டறிக்கையில் தெரிவித்தார்.

இதேவேளை, சமய குரவர்களில் ஒருவரான திருஞான சம்பந்தநாயனாரினால் பாடல் பெற்ற திருக்கோணேஸ்வராலயத்தின் வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் வியாழக்கிழமை இடம்பெறவுள்ளது.

கொடியேற்ற வைபவத்துடன் ஆரம்பமாகி திருவிழா நடைபெற்ற பின்னர் ஏப்ரல் 21ஆம் திகதி சனிக்கிழமை காலை பிரெட்ரிக் கோட்டைக்குள்ள இருக்கும் பாபநாசத்தீர்த்த கிணற்றில் தீர்தோற்சவம் நடைபெறும்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X