2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

மூதூரில், வீதி போக்குவரத்துச் சட்டம் தொடர்பாக விழிப்புணர்வூட்டும் நிகழ்வு

Kogilavani   / 2012 ஏப்ரல் 03 , மு.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}



(முறாசில்)


வீதிப் போக்குவரத்துச் சட்டம் தொடர்பாக பாடசாலை மாணவர்களுக்கு விழிப்புணர்வூட்டும் நிகழ்வொன்று நேற்று திங்கட்கிழமை மூதூர் புனித அந்தோனியார் மகாவித்தியாலயத்தில் இடம்பெற்றது.

மூதூர் பொலிஸ் பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் லால் உடுகம தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மூதூர் பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எம்.ஹரீஸ், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அபு உபைதா ராஸிக் பரீட், திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.வை. லாபிர், பொலிஸ் மற்றும்  இராணுவ உயரதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பொஸிஸ் தலைமையக போக்குவரத்து கல்விப் பிரிவைச்சேர்ந்த உப பரிசோதகர் சேனக கமகே,  மற்றும் மூதூர் பொலிஸ் பரிசோதகர் ஏ.எம். நௌபர் ஆகியோர் வளவாளராக கலந்து கொண்டு போக்குவரத்துச் சட்டம் தொடர்பாக மாணவர்களுக்கு விளக்கமளித்தனர்.

நிகழ்வின் இறுதியில் போக்கவரத்து நியதிகள் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு விடையளித்த மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன.

இதேவேளை, போக்குவரத்து ஒழுங்கு விதிகள் தொடர்பாக பொதுமக்களுக்கு அறிவூட்டும் நிகழ்ச்சிகளும் மூதூர் பிரதான வீதியில் இடம்பெற்றது.







  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .