2025 மே 03, சனிக்கிழமை

திருமலையில் இளைஞர் கடத்தப்பட்டதாக புகார்

Super User   / 2012 ஏப்ரல் 08 , பி.ப. 01:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.பரீட்)


திருகோணமலை அன்புவழிபுரத்தில்; கடந்த வெள்ளிக்கிழமை காலை 7.30 மணியளவில் 27 வயது நிரம்பிய இளைஞரொருவர் இனந்தெரியாத நபர்களால் கடத்தப்பட்டதாக அவருடைய தாயார் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

திருகோணமலை அன்புவழிபுரத்தைச் சேர்ந்த ரவிந்திரர்- ரகுமாரன் வான் சாரதி என்பவரே கடத்தப்பட்டதாக அவரின் தாயார் தெரிவித்துள்ளார்.

தனது மகன் கடந்த வெள்ளிக்கிழமை காலை திருகோணமலை தனியார் மருத்துவமனைக்கு வானில் சென்றவேளையில் அவரின் வானில் இருந்து இறக்கப்பட்டு மற்றொரு வானில் கொண்டு சென்றாகவும் இது வரையும் வீடு திரும்பவில்லையெனவும் தெரிவித்தார்.

இது தொடர்பாக திருகோணமலை பொலிஸில் தான் முறைப்பாடு செய்துள்ளதாக அவர் கூறினார். மூன்று பெண் பிள்ளைகளின் தாயாரான தனக்கு, கடத்தப்பட்டவர் மாத்திரமே ஒரே ஒரு புதல்வர் எனவும் தனது கணவர் இறந்த பின்னர் தமது குடும்பச் சுமையை இவரே கவனித்து வந்ததாகவும் அப்பெண் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X