2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

கிண்ணியா, மஹ்ரூப் நகர் கிராம உத்தியோகத்தர் தாக்கப்பட்டமையை கண்டித்து கருப்புப்பட்டி போராட்டம்

Super User   / 2012 ஏப்ரல் 11 , மு.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கியாஸ் ஷாபி)


கிண்ணியா, மஹ்ரூப் நகர் கிராம உத்தியோகத்தர் எஸ்.எம்.ஜயூப் கடந்த திங்கட்கிழமை கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது தாக்கப்பட்டமையை கண்டித்து இன்று புதன்கிழமை கிண்ணியா பிரதேச செயலக ஊழியர்கள் கருப்புப்பட்டி போராட்டத்தை மேற்கொண்டனர்.

குறித்த தாக்குதல் சம்பவத்தில் மஹ்ரூப் நகர் கிராம சேவகர் அலுவலகமும் சேதமாக்கப்பட்டுள்ளது.இந்த விடயம் தொடர்பில் கிண்ணியா பிரதேச செயலாளர் சி.கிரிஸ்நேந்திரன் கருத்து  தெரிவிக்கையில்,

"பொதுமக்களுக்காக தங்களை அர்ப்பணித்து சேவையாற்றி வரும் அரச உத்தியோகத்தரொருவர் இவ்வாறு தாக்கப்படுவது கவலையளிக்கின்றது.

பொதுமக்களின் சேவைகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவே இன்று கருப்பட்டி அணிந்து கடமையை செய்கிறோம். குறித்த கிராம சேவகர் மற்றும் அவரது அலுவலகத்தையும் தாக்கியவர்கள் கிண்ணியா பொலஸாரால் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .