2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

தம்புள்ளை சம்பவம் இலங்கையின் நற்பெயருக்கு பெரும் களங்கம்: தௌபீக் எம்.பி

Super User   / 2012 ஏப்ரல் 20 , பி.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


தம்புள்ளையில் இயங்கிவந்த பழம்பெரும் பள்ளிவாயல் தாக்கி சேதப்படுத்தப்பட்டமை இலங்கையின் நற்பெயருக்கு பெரும் களங்கமாகும் என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அவ்வறிக்கையில்  அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

சுமார் 100 ஆண்டு கால பழமைவாய்ந்த இப்பள்ளிவாயல் புனித பூமி என்ற காரணத்தைக் காட்டி இன்று வெள்ளிக்கிழமை தாக்கப்பட்டுள்ளது. பள்ளிவாயல் என்பதும் இறைவனை வணங்குகின்ற ஒரு இடமேயன்றி கேளிக்கை புரியும் இடமல்ல. அந்த வகையில் இதுவும் புனிதமானதுதான்.

கதிர்காமத்தில் இன்றும் கூட சகல வணக்கஸ்தலங்களும் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் அமைந்திருப்பது இந்தப் புனிதத் தன்மையினால்தான். இதனைப் புரிந்து கொள்ளாதவர்கள் இந்நாட்டில் இருப்பது இலங்கையின் நற்பெயருக்கு பெரும் களங்கமாகும்.

ஜெனீவா மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு ஆதரவு அளித்தவற்றுள் பெரும்பாலானவை முஸ்லிம் நாடுகள். எனவே, பள்ளிவாயலைத் தாக்கிய இந்த ஈனச் செயலானது அந்நாடுகளின் முகத்தில் கரி பூசியதைப் போன்றதாகும்.

இதுபோன்ற நிலை தொடர்ந்து நீடிக்குமானால் இந்நாடு சர்வதேச மட்டத்தில் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்க வேண்டி வரும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

எனவே, ஜனாதிபதி இவ்விடயத்தில் நேரடியாகத் தலையிட்டு பள்ளிவாயலைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் மூலம் முஸ்லிம்களின் பேரபிமானத்தை  பெற முடியும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .