2025 மே 02, வெள்ளிக்கிழமை

பொதுப்பாட ஆசிரியர்களை கௌரவிக்கும் நிகழ்வு

Suganthini Ratnam   / 2012 ஏப்ரல் 23 , மு.ப. 09:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


(முறாசில்)

கந்தளாய் அந்-நஜாஹ் அரபுக்கல்லூரியில் பொதுப்பாட ஆசிரியர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வின்போது பொதுப்பாடங்களைப் போதித்த 20 ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

மௌலவி எம்.ஆர்.எம்.பர்ஹான் தலைமையில் கல்லூரி அதிபர்  மௌலவி ஏ.ஆர். எம். நஸீர் நத்வியின் வழிகாட்டலில் கல்லூரியில் பட்டம் பெற்று வெளியேறும் மாணவர்களினால் இந்நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் கந்தளாய் பிரதேச சபை உறுப்பினரும் கல்லூரி முகாமைத்துவ சபைத் தலைவருமான   சட்டத்தரணி எம்.எஸ் மதார், கந்தளாய் பிரதேச  சபை உறுப்பினர் ஏ.ஜே.எம்.ஜெஸீல், முன்னாள் கந்தளாய் கோட்டக் கல்லூரி அதிகாரி பி.ஸெய்னுல் ஆப்தீன், கந்நளாய் - தம்பலகாமம் பிரிவிற்கான காழி மௌலவி சீ.ஏ.ஜப்பார், இலாஹிய்யா ஜும்ஆப்பள்ளி தலைவர் மௌலவி எம்.நஸார்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X