2025 மே 02, வெள்ளிக்கிழமை

மூதூர் மணற்சேனை கிராமத்தில் மலேரியா விழிப்புணர்வு நிகழ்வு

Kogilavani   / 2012 ஏப்ரல் 24 , மு.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

(முறாசில்)
உலக மலேரியா தினத்தை முன்னிட்டு திருகோணமலை மாவட்ட மலேரியா தடை இயக்கத்தின் அனுசரணையில் மேற்கொள்ளப்பட்ட  மலேரியா விழிப்புணர்வு  நிகழ்வு   நேற்று  திங்கட்கிழமை  மூதூர் மணற்சேனை கிராமிய வைத்தியசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.

மூதூர்  சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எம். சுக்ரி தலைமையில்   நடைபெற்ற இந்நிகழ்வில்  மலேரியா தடை இயக்க பிராந்திய வைத்திய அதிகாரி  டாக்டர் எஸ் ஜமுனா, மலேரியா கட்டுப்பாட்டு மேற்பார்வை உத்தியோகத்தர் ஏ.அருள்தாஸ், ஆய்வுகூட தொழில் நுட்பவியலாளர் ஏ.எச்.ஸியாமலா, பொது சுகாதார வெளிக்கள உத்தியோகத்தர் எம்.ஏ.றாஸிக்கீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நுளம்புகளின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தல் மற்றும்  மலேரியா நோய்பற்றிய விழிப்புணர்வு தொடர்பான நிகழ்ச்சிகளில் பெருந்தொகையான  பொதுமக்கள்  கலந்துகொண்டு பயன்பெற்ற அதேவேளை அவர்களுக்கு 300இற்கும் மேற்பட்ட நுளம்பு வலைகளும் பகிர்ந்தளிக்கப்பட்டன.
  

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X