2025 மே 02, வெள்ளிக்கிழமை

கிழக்கு மாகாண பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்

Menaka Mookandi   / 2012 ஏப்ரல் 24 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கஜன், ரமன்)


கிழக்கு மாகாணத்தில் கடமையாற்றவென 327 பட்டதாரிகளுக்கும், டிப்ளோமாதாரிகளுக்கும் ஆசிரியர் நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் திருகோணமலை, உவர்மலை விவேகாநந்தா கல்லூரி கலையரங்கில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது. 

71 சிங்கள மொழிமூலமானவர்களுக்கும். 256 தமிழ் மொழி மூலமானவர்களுககும் இந்நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டன. இவர்கள் கணிதம், விஞஞானம், ஆங்கிலம் ஆகிய  பாடங்களை  பாடசாலைகளில் கற்பிக்க உள்ளனர்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்துன் மற்றும் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் விமரவீர திசாநாயக்கா, வீதி நீர்பாசனம், பெருந்தெருக்கள் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை. சுகாதார விளையாட்டு அமைச்சர் எம்.எஸ்.சுபைர் ஆகியோர் இதில் கலந்து கொண்டு நியமனக் கடிதங்களை ஆசிரியர்களுக்கு வழங்கி வைத்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X