2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

திருமலை வைத்தியசாலை பிள்ளையார் கோயில் புதிய முகப்பு பகுதியினை அகற்றவே உத்தரவு: மருத்துவ அத்தியட்சகர்

Menaka Mookandi   / 2012 ஏப்ரல் 26 , மு.ப. 08:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரமன்)


திருகோணமலை பொது வைத்தியசாலை வளாகத்திலுள்ள 60 வருடம் பழமைவாய்ந்த பிள்ளையார் கோயிலில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட முகப்பு பகுதி சட்டத்துக்கு முரணான வகையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியினை அகற்றுமாறு நகர அபிவிருத்தி அதிகாரசபை அறிவித்துள்ளதாக வைத்தியசாலையின் மருத்துவ அத்தியட்சகர் கலாநிதி ஈ.ஜி.ஞானகுணாளன் தெரிவித்தார்.

தவிர, குறித்த பிள்ளையார் கோயிலை முழுமையாக அகற்றுமாறு நகர அபிவிருத்தி அதிகாரசபை அறிவிக்கவில்லை எனவும் மேற்படி கோயில் அவ்விடத்திலிருந்து அகற்றப்பட வேண்டும் என்றும் வெளியான செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .