2025 மே 02, வெள்ளிக்கிழமை

கரையோரங்களை கடலரிப்பிலிருந்து பாதுகாக்க தடுப்பு சுவர்கள் அமைக்க நடவடிக்கை

Kogilavani   / 2012 ஏப்ரல் 27 , மு.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.பரீட்)
கிண்ணியா, மூதூர் பிரதேச கரையோரங்களை கடலரிப்பிலிருந்து பாதுகாக்க கரையோர பாதுகாப்பு சுவர்கள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூதூர் தொகுதி அமைப்பாளரும், முன்னாள் அமைச்சரும் ஜனாதிபதியின் திருகோணமலை மாவட்ட அபிவிருத்தியின் இணைப்பாளருமான நஜீப் ஏ.மஜீத்தினால் தொடர்ச்சியாக விடுக்கப்பட்டு வந்த வேண்டுகோளுக்கிணங்க இத்திட்டதிற்கென 170 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கான பணிகளை பார்வையிடுவதற்காக கடந்த செவ்வாய்க்கிழமை கரையோர பாதுகாப்புத் திணைக்கள பொறியளாளர் உட்பட அதிகாரிகள் கிண்ணியா, மூதூர் பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்டனர்.

இத்திட்டம் தொடர்பாக ஜனாதிபதி, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் கரையோர திணைக்கள உயரதிகாரிகளையும் சந்தித்த முன்னாள் அமைச்சர் நஜீப் ஏ. மஜீத், இத்தடுப்புச் சுவர் கட்டுவதன் மூலம் இவ்விரு பிரதேசங்களிலும் வாழும் மக்களையும், பாதைகளையும் பாதுகாக்க முடியும் எனவும் சுட்டிக்காட்டியதுடன், பாதுகாப்பு சுவர் இல்லாமையால் கரையோர மக்கள் பல இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர் என்றும் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X