2025 மே 02, வெள்ளிக்கிழமை

வட – கிழக்கு இணைந்த தமிழர் தாயகம் நோக்கியே அரசியல் தீர்வு எட்டப்பட வேண்டும்: திருமலை மே தின பிரகடனம

Menaka Mookandi   / 2012 மே 01 , பி.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


(சி.குருநாதன்)


வடக்கு - கிழக்கு மாகாண அரசாங்க உத்தியோகஸ்தர் சங்கம் இன்று செவ்வாய்க்கிழமை மாலை திருகோணமலை நகர மண்டபத்தில் நடத்திய மே தினக் கூட்டத்தில் 'வடக்கு - கிழக்கு இணைந்த தமிழ் பேசும் மக்களின் தாயகமாகக் கருதியே எந்தவொரு அரசியல் இறுதித் தீர்வும் வழங்கப்பட வேண்டும் என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசுடனான பேச்சுவார்த்தையின் போது தொடர்ந்து வலியுறுத்த வேண்டும்' என்று கோரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சங்கம் முன்வைத்த பத்து அம்சங்கள் அடங்கிய மே தின பிரகடனத்தில் இத்தீர்மானமும் ஒன்றாக அமைந்துள்ளது. இப்பிரகடனத்தை  சங்கத்தின் செயலாளர் நாயகம் இ.மணிவண்ணன் வெளியிட்டார்.

சங்கத்தின் கிழக்கு மாகாண அமைப்பாளர் எஸ்.சுரேந்திரன் தலைமையில் நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட தமிழத் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், பொன். செல்வராசா, சீ.யோகேஸ்வரன் மற்றும் திருகோணமலை நகரசபையின் தலைவர் க.செல்வராசா, வவனியா நகரசபையின் உபதலைவர் எம்.எம்.ரதன், திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபையின் தலைவர் இ.விஜேந்திரன். திருகோணமலை மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ணசிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மே தினப் பிரகடனத்தில் இடம்பெற்றுள்ள ஏனைய தீர்மானங்கள் சில வருமாறு:-

போரினால் பாதிக்கப்பட்டுள்ள அரசாங்க ஊழியர்களுக்கு மாதாந்த விசேட படிகள் வழங்கப்பட வேண்டும்.

யுத்தம் முடிந்த பின்னரும் சிறைச்சாலைகளில் அனாவசியமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரச ஊழியர்கள், கைதிகள் (ஆண்கள், பெண்கள்) அனைவரையும் பொதுமன்னிப்பு வழங்கி அரசாங்கம் விடுதலை செய்ய வேண்டும்.

வடக்கு கிழக்கில் யுத்த முடிந்த போதும் இளைஞர்கள், யுவதிகள் கைது செய்யப்படுதல், தடுத்து வைத்தல் என்பன தொடர்ந்துகொண்டே இருக்கின்றது. இது இளைஞர் யுவதிகளின் மனதில் அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளதுடன் இயல்பு வாழ்க்கைக்கு இடையூறாகவும் அமைகின்றது. இவ்விடயத்தை அரசாங்கம் கவனத்தில் எடுத்து இவ்வாறான விடயங்கள் இடம்பெறாமல் இருக்க அரசாங்கம் உத்தரவாதம் வழங்க வேண்டும்.

வடக்கு கிழக்கில் சிவில் நிர்வாகத்தில் சிவில் அதிகாரிகளை நியமனம் செய்வதற்கு  அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்ற அம்சங்கள் உள்ளிட்ட தீர்மானங்கள் பிரகடனப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X