2025 மே 02, வெள்ளிக்கிழமை

வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைந்திருப்பதையே மக்கள் விரும்புகின்றார்கள்: அரியநேந்திரன்

Kogilavani   / 2012 மே 02 , மு.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கஜன்)
'வடக்கு  கிழக்கு மாகாணங்கள் அரசாங்கத்தின் சூழ்ச்சியால் பிரிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் இங்கு வாழும் மக்கள் வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைந்திருப்பதையே விரும்புகின்றார்கள்' என  மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் தெரிவித்தார்.

வடக்கு  கிழக்கு அரசாங்க ஊழியர் சங்கத்தின் மேதினம் பொதுக்கூட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை திருகோணமலை நகரசபை  மண்டபத்தில் நடைபெற்றது.

சங்கத்தின் தலைவர் எஸ்.சுரேந்திரன் தலைமையில் கூட்டம் நடைபெற்ற இக் கூட்டத்தில் மட்டக்களப்பு  மாவட்ட நாடாளுமன்ற  உறுப்பினரகளான சீ.யோகேஸ்வாரன, பொன்.செல்வராசா, முன்னாள் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற  உறுப்பினர் க.துரைரெட்ணசிங்கம்  ஆகியோர் கலந்து கொண்டு விசேட உரை நிகழ்த்தினார்கள்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய நாடாளுமன்ற  உறுப்பினர் ப.அரயநேந்திரன்,

'இலங்கை  இந்திய  அரசாங்கம் செய்த கொண்ட ஒப்பந்தம் காரணமாக 13ஆவது திருத்த சட்டத்தற்கு  அமைவாக  வடக்கு  கிழக்கு  மாகாணங்கள் ஒன்றாக  இணைக்கப்பட்துடன் மாகாண சபை முறைமைகளும் தோற்றுவிக்கப்பட்டன. அரசாங்கம் தன்னுடன் இணைந்து கொண்டு ஜே.வி.பி கட்சியினரைத்  தூண்டி அவர்கள் மூலமாக இந்த இரண்டு  மாகாணங்களையும்  சட்ட ரீதியாக  பிரித்துக் கொண்டது.

இருந்தாலும் தமிழ் மக்கள் வடக்கு  மாகாணத்ததையும். கிழக்கு  மாகாணத்தையும் இணைத்த முறையிலேயே அதனையே  தாயகமாக  கருதுகின்றார்கள். இவ்விரண்டு மாகாணத்தின் தலைநகராக  திருகோணமலையை கருதுகின்றார்கள். இந்த மண் பெரும் தியாகம் செய்த மண்.தியாகத்தின் முதல் சுடராக நடராஜன் என்பவரை முதலில் பலி கொடுத்தனர்.

தமிழ் தேசிய கூட்மைப்பை பிரிக்க வேண்டும் என்று பலர் நினைக்கின்றார்கள். இதற்கு  உறுதுணையாக பிரதேசவாதத்தை தூண்டி விடுகின்றார்கள். இதற்கு  சிலர் ஒத்துழைப்பும் வழங்கி தீனியும் போடுகின்றார்கள். இனவாதம் பிரதேச வாதம் என்பனவற்றுக்கு நாங்கள் தற்போது முகம் கொடுக்க வேண்டியவர்களாக  இருக்கின்றோம்' என்றும் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் உரையாற்றுகையில், 'இந்த அரசாங்கம் தொழிலாளர்களை  அடக்கப்பார்க்கின்றது. அவர்களது உரிமைகளை நசுக்குகின்றது. அடிக்கடி  பொருட்களின் விலைகள் உயர்த்தப்பட்டு ஏழைகளின் வயிற்றில் அடிப்பதுடன் தொழிலாளர்கள் மீது சொல்லொணாசுமைக ஏற்றுகின்றது' என்று தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X