2025 மே 02, வெள்ளிக்கிழமை

விளையாட்டு மைதானத்துக்கான காணியில் பிரதேச நீதிமன்றம் அமைப்பதற்கு எதிர்ப்பு

Menaka Mookandi   / 2012 மே 04 , பி.ப. 02:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கியாஸ் ஷாபி)


கிண்ணியா பிரதேசத்தில் உள்ள முனைச்சேனைப் பகுதில் விளையாட்டு மைதானத்திற்காக ஒதுக்கப்பட்ட காணில் பிரதேச நீதிமன்றம் அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று வெள்ளிக் கிழமை இப்பகுதி இளைஞர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

இது குறித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கருத்துத் தெரிவிக்கையில், கடந்த 20 வருடகாலமாக விளையாட்டு மைதானத்திற்கென்று பராமரிக்கப்ட்பட்டு வந்த இக்காணி தற்போது கிண்ணியா பிரதேச செயலாளரினால் நீதிமன்ற கட்டடம் நிர்மாணிப்பதற்காக அங்கிகாரம் அளிக்கப்பட்டடுள்ளது.

இதற்காக பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் தற்போது இக்காணி கிரவல் போடப்பட்டு செப்பனிடப்பட்டுக்கொண்டிருக்கின்றது. ஆனால் கிண்ணியா பிரதேச சபை இக்காணியை ஏற்கனவே விளையாட்டு மைதானத்திற்கு ஒதுக்கியதோடு அவற்றைப் புனரமைப்பும் செய்து தந்தது என்று தெரிவித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் இளைஞர்களால் குறித்த பகுதி வேலி போட்டு நீதிமன்ற கட்டடத்திற்காக செப்பனிடும் பணிக்கு தடையேற்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X