2025 மே 02, வெள்ளிக்கிழமை

மின்னல் தாக்கி ஒருவர் பலி

Super User   / 2012 மே 07 , பி.ப. 02:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.பரீட், கியாஸ் ஷாபி)

திருகோணமலை, முள்ளிப்பொத்தானை பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை மாலை மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.

49 வயதான முகம்மது நஸீர் என்பவரே மின்னல் தாக்கி உயிரிழந்தவராவார். நான்கு பிள்ளைகளின் தந்தையான இவர், தனது வாகனம் திருத்தும் நிலையத்தில் திருத்த வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போதே மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, புல்மோட்டை பகுதியில் கடலுக்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்து படகில் நின்று கொண்டிருந்த 54 வயதான மீரா நெய்னா சஹாப்தீன் மின்னல் தாக்கி விழுந்துள்ளார்.

இதனையடுத்து, குறித்த நபர் கடற் படையினரால் காப்பற்றப்பட்டு புல்மோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X