2025 மே 02, வெள்ளிக்கிழமை

ரெலோ ஸ்ரீ சபாரத்தினத்தின் நினைவு தின கூட்டம்

Super User   / 2012 மே 13 , பி.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.குருநாதன்)


ரெலோ என்றழைக்கப்படும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் மறைந்த தலைவர் ஸ்ரீ சபாரத்தினத்தின் 26ஆவது நினைவு தினக்கூட்டம் இன்று ஞாயிழற்றுக்கிழமை மாலை திருகோணமலை நகர மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது, தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி மறைந்த தலைவர் ஸ்ரீ சபாரத்தினத்தின் படத்திற்கு மலர்மலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

வன்னி மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், வினோநோகாரதலிங்கம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், க.துரைரெட்ணசிங்கம் மற்றும் ரெலேவின் செயலாளர் நாயகம் ஹென்றி மகேந்திரன் உட்பட பலர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X