2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

கிழக்கு மாகாணத்தில் பாரிய தேடுதல் நடவடிக்கை

Suganthini Ratnam   / 2012 மே 22 , மு.ப. 02:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாணத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட முற்றுகை நடவடிக்கையின்போது, நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு நீதிமன்றத்துக்கு வராமலிருந்த 258 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஜகத் அபேசிறிவர்தனவின் அறிவுறுத்தலுக்கமைய கிழக்கு மாகாணத்தின் 4 பொலிஸ் பிரிவுகளை உள்ளடக்கி இந்த முற்றுகை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது திருகோணமலை பொலிஸ் பிரிவிலிருந்து  பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 44 பேரும் கந்தளாயில் 22 பேரும் மட்டக்களப்பில் 122 பேரும் அம்பாறையில் 70 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். (அமதோரு அமரஜீவா)

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .