2025 மே 02, வெள்ளிக்கிழமை

திருமலையில் வீதி புனரமைப்பு வேலைகள் ஆரம்பம்

Suganthini Ratnam   / 2012 மே 28 , மு.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


(முறாசில்)


திருகோணமலை, மூதூர் பிரதேச செயலகப் பிரிவில்  ஜெய்கா மற்றும் ஈ.என்.டி.ஆர்.எப் ஆகிய  திட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ள நான்கு வீதிகளுக்கான  புனரமைப்பு வேலைகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்துவைக்கப்பட்டன.

கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், வீடமைப்பு நிர்மாணம், கிராமிய மின்சாரம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பையின் அழைப்பின் பேரில் மூதூருக்கு விஜயம் செய்த  உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா பிரதம அதிதியாக கலந்துகொண்டு புனரமைப்பு வேலைகளை  ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை தவிசாளர் எம்.எச்.எம். பாயிஸ், வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் வி;.கருணநாதன், பிரதம பொறியியலாளர் ஜி.சுகுமாரன், மூதூர் பிரதேச சபை தவிசாளர் ஏ.எம். ஹரீஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0

  • sivanathan Monday, 28 May 2012 01:34 PM

    மூதூர் கிழக்கு பகுதிகளிலும் ஞாயிறு மாலை இவ்வாறு வேலைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டதே.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X