2025 மே 02, வெள்ளிக்கிழமை

சம்பூரில் விஷேட கனரக கைத்தொழில் வலயம்; கிராமவாசிகள் எதிர்ப்பு மனுத்தாக்கல்

Menaka Mookandi   / 2012 ஜூன் 17 , மு.ப. 08:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எஸ்.செல்வநாயகம்)

சம்பூர் கிராமத்தில் விஷேட கனரக கைத்தொழில் வலயம் ஒன்றை அமைப்பதற்கு வகைசெய்யும் அரசாங்க வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக இடம்பெயர் கிராமவாசிகள் ஏழுபேர் உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமைமீறல் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளனர்.

திருகோணமலை மாவட்டத்திலுள்ள இந்தக் கிராமத்தில் தமது உடைமைகள் உள்ளடங்கியிருப்பதாகவும், தமது குடும்பங்கள் பல தசாப்த காலங்களாக இந்த உடைமைகளுக்கு உரித்துரிமை உடையவர்கள் என்றும் அந்த மனுவில் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

2007ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு வந்தபோதிலும், கடந்த ஐந்து ஆண்டுகளாகத் தாம் தொடர்ந்தும் தற்காலிக இடங்களில் இடம்பெயர்ந்தவர்களாக இருந்துவருவதாகவும் மனுவில் தெரிவித்துள்ளனர்.

அவசரகாலப் பிரகடனம் 2011ஆம் ஆண்டு காலாவதியாகிவிட்டதை அடுத்து உயர் பாதுகாப்பு வலயம் சட்டரீதியாக நடைமுறையில் இருந்து இல்லாமல் போய்விட்டது. ஆயினும் தாம் தமது சொத்துடைமைகளைப் பெற்றுக்கொள்வதை அரசாங்க அதிகாரிகளும், இராணுவத்தினரும் தொடர்ந்தும் தடுத்து வருகிறார்கள் என்றும் அம்மக்கள் தமது மனுவில் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X