2025 மே 02, வெள்ளிக்கிழமை

வெள்ளைமணல் மீனவர்களுக்கான கட்டுப்பாடுகளை நீக்கக் கோரிக்கை

Suganthini Ratnam   / 2012 ஜூன் 24 , மு.ப. 08:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

(முறாசில்)

திருகோணமலை மாவட்டத்தின் பட்டிணமும்சூழலும் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள வெள்ளைமணல் கிராம உத்தியோகத்தர் பிரிவைச் சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிப்பதற்கு நீண்டகாலமாக விதிக்கப்பட்டுவந்த கட்டுப்பாடு இற்றைவரை தளர்த்தப்படாதுள்ளதாக வெள்ளைமணல் ஐக்கிய   மீனவர் சங்கத் தலைவர் எம்.ஐ.சுபைர் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை மாவட்டத்திலுள்ள மீனவர்களுக்கு நீண்டகாலமாக விதிக்கப்பட்டுவந்த  மீன்பிடித் தொழிலுக்கான கட்டுப்பாடுகள் 2012.06.20ஆம் திகதியுடன்  நீக்கப்படுவதாக கிழக்கு மாகாண ஆளுநர் ரியர் அட்மிரல் மொஹான் விஜயவிக்கிரம அறிவித்திருந்தார். இதற்கமைய  திருகோணமலை மாவட்டத்திலுள்ள மூதூர், கிண்ணியா, குச்சவெளி உள்ளிட்ட பிரதேசங்களைச் சேர்ந்த மீனவர்கள் எவ்வித கட்டுப்பாடுமின்றி சுதந்திரமாக மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுவருகின்றனர்.

ஆனால் வெள்ளைமணல் கிராம உத்தியோகத்தர் பிரிவைச் சேர்ந்த 500க்கும் அதிகமான மீனவர்கள்  இற்றைவரை    பாஸ் நடைமுறையைப்  பின்பற்றுமாறு நிர்ப்பந்திக்கப்படுவதாகவும் இப்பகுதி மீனவர்களில்   சிறுதொகையினருக்கே நாளொன்றுக்கு மீன்பிடித்தலுக்கான அனுமதி வழங்கப்படுவதாகவும் வெள்ளை மணல் ஐக்கிய   மீனவர் சங்கத் தலைவர் கூறினார்.

இம்மாவட்டத்திலுள்ள ஏனைய மீனவர்களைப் போன்று  இப்பகுதி மீனவர்களும் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X