2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

தோப்பூர் வாகன விபத்தில் தந்தை, மகள் பலி

Menaka Mookandi   / 2012 ஜூன் 30 , மு.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

(முறாசில், பரீட்)

திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதி, பாலைத்தோப்பு, கையில்வாடி பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்துச் சம்பவமொன்றில் தந்தை,  மகள் என இருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
 
காலை 8 மணியளவில் குறித்த பகுதியினூடாகப் பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிளொன்றும் லொறியொன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த இருவருமே உயிரிழந்துள்ளனர்.

சம்பவத்தில், தோப்பூர் தபால் அலுவலக ஊழியரான கே.எம்.நௌபல் (வயது 50) மற்றும் அவரது மகள் பாத்திமா ஸிபாயா (வயது 19) ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0

  • ismaeel naseer Sunday, 01 July 2012 11:35 AM

    யா அல்லாஹ் அவர்களுடைய கப்ருகளை நீ பிரகாசமாக்கி வைப்பாயாக உனது றஹ்மத்தைக்கண்டு அவர்களை பொருந்திக்கொள்வாயாக........ஆமீன்......

    Reply : 0       0

    ARM.Lareef - Tr Sunday, 08 July 2012 02:46 PM

    யா அல்லாஹ் உன்னுடைய றஹ்மத்தைக் கொன்டு அவர்களை பொருந்திக்கொள்வாயாக........ஆமீன்.
    ஆமீன். ஆமீன். ஆமீன். யரபல் ஆலமின்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .