2025 மே 02, வெள்ளிக்கிழமை

விசேட தேவையுடைய பெண்களுக்கான நிதியுதவி வழங்கும் நிகழ்வு

Kogilavani   / 2012 ஜூலை 04 , மு.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.பரீட்)

திருகோணமலை மாவட்டத்தில் விசேட தேவையுடைய பெண்கள் சுய தொழிலை மேற்கொள்வதற்கான நிதியுதவி வழங்கும் நிகழ்வு நடுத்தீவு சன சமூக நிலையத்தில் நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்றது.

ஐரோப்பிய யூனியனின்; அனுசரனையுடன் அநூராதபுரத்தில் இயங்கும் ஆகாஸ் பெண்களுக்கான வலுவூட்டல் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் கிரிஷடினா ரொபின்சன் கலந்துக்கொண்டு நிதியினை கையளித்தார்.

கிண்ணியா, தம்பலகாமம் ஆகிய கிராமங்களை சேர்ந்த பெண்களுக்கு இந்நிதியுதவி வழங்கப்பட்டது.

இதன்போது, உரையாற்றிய இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் கிரிஷ்டினா ரொபின்சன்,

'பிரான்ஸ் நாட்டின் உதவி இலங்கைக்கு பெருமளவு கிடைக்கின்றது.

கிண்ணியா - மட்டக்களப்பு வீதியில் உள்ள பாலம், கந்தளாய் நீர் சுத்திகரிப்பு நிலையம், கிண்ணியா மகாமாறு பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் நீர்த்தாங்கி போன்ற அபிவிருத்தி திட்டங்கள் பிரான்ஸ் நாட்டின் நிதியுதவியினூடாக முன்னெடுக்கப்படும் மனிதாபிமான நடவடிக்கைகளாகும்.

திருகோணமலை மாவட்டத்தில் குடிநீர் சுத்கரிப்பு நிலையத்தில் பிரான்ஸ் பொறியியலாளர்கள் தமது துரித பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன்மூலம் இம் மாவட்டத்தில்; 3 இலட்சம் பேருக்கு குடிநீர் விநியோகிக்கப்படவுள்ளது' என அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில், தம்பலகாமம் பிரதேச செயலாளர், மற்றும் ஐரோப்பிய ஜூனியர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X