2025 மே 02, வெள்ளிக்கிழமை

ரொட்டரிக்கழக திருமலைக் கிளைக்கு புதிய தலைவர்

Suganthini Ratnam   / 2012 ஜூலை 04 , மு.ப. 08:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரமன்,கஜன்)


ரொட்டரிக்கழக திருகோணமலைக்கிளையின் 34ஆவது தலைவராக பொறியியலாளர் பெனடிக் ரஞ்சித் ஜெயக்குமார், ரொட்டரிக்கழக மாவட்டம் 3220இன் உதவி ஆளுநர் சமன் குணவர்தன முன்னிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை பதவியேற்றார்.

ரொட்டரிக்கழக திருகோணமலைக்கிளையின் 2011 - 2012 இற்கான தலைவராக இருந்த பொறியியலாளர் அ.கிருபாகரன் 2012 – 2013ஆம் ஆண்டு காலப்பகுதிக்கு புதிதாக தெரிவுசெய்யப்பட்ட பெனடிக் ரஞ்சித் ஜெயக்குமாரிடம் தலைவர் பொறுப்பைக் கையளித்தார்.

இதன்போது திருகோணமலை மாவட்டத்தின் 3 பின்தங்கிய பிரதேசப் பாடசாலைகளுக்கு கணினிகள் ரொட்டரிக்கழக திருகோணமலைக்கிளையினால் வழங்கப்பட்டன.

ரொட்டரிக்கழக திருகோணமலைக்கிளை அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்முனைஇ மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்ரா சசிமகேந்திரன் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X