2025 ஜூன் 28, சனிக்கிழமை

பாகிஸ்தான் அரசாங்கத்தினால் நிர்மாணிக்கப்பட்ட பொது கிணறுகள் மக்கள் பாவனைக்காக கையளிப்பு

Super User   / 2012 ஜூலை 06 , மு.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கஜன்)


பாகிஸ்தான் அரசாங்கத்தினால் நிர்மாணிக்கப்பட்ட மூன்று பொது கிணறுகள் மக்கள் பாவனைக்காக நேற்று வியாழக்கிழமை கையளிக்கப்பட்டது.

வரட்சியனால் குடி நீருக்கு  அல்லல்படும் மக்களின் தேவை  கருதி திருகோணமலை, மொரவேவ பிரதேசத்திலேயே  இக்கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன.

கிழக்கு  மாகாண ஆளுநர் ரியர் அட்மிரல் மொஹான் விஜய விக்கிரமவின் வேண்டுகோளின் பேரில் கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தினால் தலா 300,000 ரூபாய் செலவில் குறித்த மூன்று கிணறுகளும் அமைக்கப்பட்டுள்ளன.

இலங்கைக்காக  பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் சீமா இலாகி பலூச் மற்றும் மாகாண ஆளுநருடன் மொரவேவ பிரதேசத்திற்குச் சென்று விஜயம் செய்து குறித்த கிணறுகளை மக்களிடம் கையளித்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .