2025 மே 02, வெள்ளிக்கிழமை

திருகோணமலையில் கைத்தொழில் கண்காட்சி

Kogilavani   / 2012 ஜூலை 07 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


(முறாசில்)

கைத்தொழில் அபிவிருத்திக் கண்காட்சி திருகோணமலை சிங்கள மத்திய மகா வித்தியாலயத்தில் இன்று சனிக்கிழமை ஆரம்பமானது.

திருகோணலை மாவட்ட செயலாளர் ரி.ரி.ஆர்.டி.சில்வா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாரம்பரிய கைத்தொழில், சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரதம அதிதியாக கலந்து கொண்டு கைத்தொழில் கண்காட்சியை ஆரம்பித்து வைத்தார்.

இதன்போது தையல் பயிற்சிநெறி உட்பட பல்வேறு துறைகளில் பயிற்சியை மேற்கொண்டவர்களுக்கு சான்றிதல்களும் வழங்கப்பட்டன.

கண்காட்சியை காண்பதற்காக மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களிலிருந்தும்  ஆயிரக்கணக்கானோர் வருகை தந்தவண்ணமுள்ளனர்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X