2025 மே 02, வெள்ளிக்கிழமை

தம்பலகாமத்தில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் அடித்துக் கொலை

Suganthini Ratnam   / 2012 ஜூலை 09 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

தம்பலகாமம் பகுதியைச் சேர்ந்த பொதுச் சுகாதார பரிசோதகர் ஒருவர் வீடொன்றைப் பரிசோதிப்பதற்கு இன்று திங்கட்கிழமை காலை சென்றபோது அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

மேற்படி பொதுச் சுகாதார பரிசோதகர் சிராஜ் நகர் கிராம அலுவலகப் பிரிவுக்குப் பொறுப்பான முகமட் பலீல் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவரைத் தாக்கிய சந்தேக நபர் மனநிலை பாதிக்கப்பட்டவர் எனக் கூறப்படுகின்றது. பொதுச் சுகாதாரப் பரிசோதகர் வாயில்க் கதவை திறக்குமாறு கூறியதும் சந்தேக நபர் கதவை திறந்ததாகவும் இதன் பின்னர் சந்தேக நபர் பரிசோதகரைத் தாக்கியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் தம்பலகாமம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். (அமதோரு அமரஜீவா, முறாசில், எம்.பரீட், fpah]; \hgp)

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X